ஆணின் காதல்

♥ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து . . . .வந்தான்

♥அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள்

♥ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்..!

♥அவள் முதலில் அவனுக்கு தந்தது ஒரு சவால்..!!!

♥ஒர மாதம் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் அவன் இருக்கவேண்டும்..!
என்று…!

♥அப்படி உன்னால் முடிந்தால்?
உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள்..!

♥அழகான அறிவான அந்தப் பெண் தான் ஒரு புற்று நோய்நோயாளி என்பது அவளுக்கு தெரியும்…

♥இந்த பூமியில் ஒரு மாதம் மட்டும் அவளால் உயிர்வாழ முடியும்..! என்று வைத்தியர் நாள் குறித்துவிட்டார்

ஒரு மாதம் முழுவதும் முடிந்தது !

♥அவன் அவளை பார்ப்பதற்காக நிறைய காதலோடும் ஒரு கடிதத்தோடும் ஒரு சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டு ஓடோடி வந்தான்..!

♥ஆனால்..!
அவன் அங்கே கண்டது,
சுவாசம் இல்லாமல் மரண படுக்கையில் கிடந்த அவள்

♥அவள் அழகிய கையில் ஒரு கடிதமும் இருந்தது

♥கடிதத்தில் நீ ஜெயித்துவிட்டாய்…
ஒரு மாதம் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும்
இருக்க முடியும் ! என நிரூபித்து விட்டாய். இனி வரும்காலங்களிலும் நீ இதே போல் வாழ்ந்து விடு..!!! நான் உன்னை உயிராக நேசித்தேன் என்று…!

♥அவன் வாழ்கிறான்…
இன்னும் அவளுக்காக….. சுவற்றில் அவளுடைய புகைப்படத்திற்கு அருகில் துணையாக புகைப்படமாக . . . . வாழ்கிறான்…

♥அங்கே இரண்டு கடிதங்கள் இருக்கின்றன ஒன்று அந்தப் பெண்ணுடையது மற்றொன்று அவன் கடைசியாக ரோஜாவோடு கொண்டு வந்த அவளுக்கான கடிதம்

♥அதில் இரண்டு வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தது . . .

♥“”உன்னை காதலித்த
பிறகு தான் அறிந்து
கொண்டேன்

♥ஒரு மாதம் தான் நீ உயிர் வாழ்வாயென்று அதனால்தான் என் வாழ்நாளையும் ஒரு மாதமாய் குறைத்துக் கொண்டேன் . . .

♥ஒரு மாதமாய் உன்னைப் பார்க்காமல் இருந்தது உன் காதலுக்கு நான் கொடுத்த உயரிய மரியாதை

♥உன்னுடனே உறங்க வருகிறேன் உயிரே . . . .
என்று எழுதப்பட்டிருந்தது
ஆணின் காதல் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல . . .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்