எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சோன்னாலும் அப்பாவைப்போல யார் இருக்க முடியும்? அம்மா என்றால் அன்பு என்கின்றோம் ஆனால் வெளிக்காட்டிக் கோள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான் அவர்களின், பாசமும் ஈரமானது தான்… என்னை பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தவள் என் தாய் என்றால் என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சிலே சுமந்தவர் “என் அப்பா”…. பலதடவை அம்மா சொல்லிகாட்டியிருப் பார்கள் பத்து மாதம் சுமந்த கதையை. ஒருதடவை கூட அப்பா சொல்லிகாட்டியதில்லை,இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழதும் நம்மை சும்ந்த கதையை… ஆண்கள் ந்ம்பிக்கைக்கு உரியவர்கள்,பாதுகாப்பானவர்கள்… என பெண்களுக்கு உணரவைக்கும முதல் ஆண் ” என் அப்பா” தான்….!
