இந்த
அமைதியான
நதிக்குள்ளே
ஒரு பெரும்
பேரோட்டம் நிகழ்கின்றது;
கரையினில் வெறும்
கால்கள் நனைத்தபடி
அமர்ந்திருக்கின்றாய் நீ;
அன்புக்கடல் நோக்கி
உன்னை இழுத்துச் செல்ல
திராணியற்றவளாய்
மௌனம் படர்ந்தே
கிடக்கின்றாள் இவள்!

இந்த
அமைதியான
நதிக்குள்ளே
ஒரு பெரும்
பேரோட்டம் நிகழ்கின்றது;
கரையினில் வெறும்
கால்கள் நனைத்தபடி
அமர்ந்திருக்கின்றாய் நீ;
அன்புக்கடல் நோக்கி
உன்னை இழுத்துச் செல்ல
திராணியற்றவளாய்
மௌனம் படர்ந்தே
கிடக்கின்றாள் இவள்!