நிஜங்களில் தொலைத்து விட்டுநினைவுகளில் தேடிப் பார்க்கும்பல சொல்லாக் காதலில் இதுவும் ஒன்றுபட பட வென பேசும் மடந்தை நீபட்டும் படாமல் பேசும் மடையன் நான்கிட்ட வந்து போகும் போதெல்லாம்எட்ட ஓடி ஒளிந்து கொண்டேன்கூடித் திரியும் காலமெல்லாம் கரைந்து போகதேடித் திரியும் இளமையெல்லாம்மறைந்து போகவிட்டில் பூச்சியாய் மரித்துப் போனகாதல் அன்றுபட்டுப் பூச்சியாய் பறக்க எத்தனிக்கும் கவிதை ஒன்று
