கருவறையில் தாங்கினாள் ஒரு பெண் தாயாக! வகுப்பறையில் தாங்கினாள் ஒரு பெண் ஆசிரியையாக!! கல்லறையிலும் தாங்குவாள் ஒரு பெண் பூமாதேவியாக!!! சுமைகளையும் சுகங்களாக பார்ப்பவள் பெண் பெண்மைக்கு எதிர் ஆண்மை தாய்மைக்கு எதிர்…….. விடை தெரியவில்லையே தாய்மைக்கு நிகர் இறைமை இல்லை இல்லை இறைமையைவிட உயர்ந்தது தாய்மை தாய்க்கும் தாய்மை உண்டு நாய்க்கும் தாய்மை உண்டு பேய்க்கும் தாய்மை உண்டு ஏனோ இந்த பாக்கியம் ஆண்களுக்கு கிட்டவில்லை பெண்மையை கண்டு என்னால் வியக்கவும் வணங்கவும் தான் முடிகிறது
![amma karuvarai - best amma kavithaigal](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/amma-karuvarai-best-amma-kavithaigal-620x620.jpg)