தந்தையின் ஏக்கம் நீ போன வருடம் தோன்றியபோது, உனது வளைவானத் தோற்றம் வேன்டுமென்று என் மகன் அழுதான்!!! குச்சிகளை வளைத்து வில்லாகக் கொடுத்துவிட்டேன்!! நீ இந்த வருடம் தோன்றியுள்ளாய், அவனுக்கு விவரம் வந்துவிட்டது, உனது வர்ணங்களைக் கேட்பதற்க்குள் மறைந்து விடேன்!!! என்னிடம் எண்கள் பொரிக்கப்பட்ட நோட்டுக்கள் இல்லை!!!!!!
