ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பிட்சை கேட்டதில்லை!கண் பட்ட இடம் எல்லாம் ஆடவர்கள் என்றாலும் நிமிர்ந்து யாரையும்ஒரு நொடியேனும் கண்டதில்லை!உடம்பு முடியாமல் இருந்தாலும் அவள் பணிக்கு செல்லாமல் இருந்தது இல்லை!குடும்ப பாரம் முழுக்க சுமக்கும் அந்த பெண்ணுக்கோ தனக்கென்று சொந்தமாய்சேலை வாங்க கூட வழி இல்லை!பாதை எங்கும் ஈக்கள் மொய்த்தாற்போல் அவளை நோட்டமிட்டபடியேகிடக்கும் சில மனித ஜந்துக்கள்!பெண் என்பதையும் மறந்து அவளின் மனதை காயப்படுத்தும் நோக்கில்செய்யும் சிலரின் ஏளனங்கள்!ஆண் மகன்கள் சிலரின் தப்பான பார்வைகள்!இது போன்ற அனைத்தையும் கண்டும் காணாதது போலபழகிக் கொண்டாள் அந்த முதிர் கன்னி தன் குடும்ப நலனுக்காக.
