துணைவி துணைதரும் யாவும் துணைவிதாமே… தோழியாய் தோள் கொடுப்பாய் துணைவியா பலம் கொடுப்பாய் துரிதமாய் செயலாற்றுவாய் அன்பே உன் பாசத்தாலே அழகாக பயணித்தேனே தேரோட்டி போல நீயே துணையாக வந்தாய் தானே பலமெல்லாம் நீயே நீயே பகடையேன் உன்னுள் தனியே தனியாக போனாலும் நீயே துணையாக வந்தாய் தானே துணைவியாய் வந்த பின்னே துயரமும் கொண்டாய் கண்ணே.. ஏனோ என்னில் பலம் சேர்த்தாய் ஏன்தான் என்னில் பலம் குறைத்தாய் உயிராக ஆன பின்னே. உறவில் ஏன்? விரிசல் கண்ணே பொழுதாகி போன பின்னும் புழுவாக துடிக்கிறேனே… புரியாத புதிராய் நீயும் புதையல்தான் என்னுள் நீயே ….கலை
