முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது சான்றோர் வாக்கு. நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போடுவது நம் எண்ணமே. நமது எண்ணத்தை சுருக்காமல், வானத்தை போல விசாலமாக படரவிட்டால் அது நம்மை வானத்தை தாண்டியும் கூட்டி செல்லும். அத்தகைய வலிமை நமது எண்ணத்திற்கு உண்டு. ஜெய்தே ஆக வேண்டும் என்று வெறியோடும் திமிரோடும் இருப்பவர்கள் முதலில் தங்கள் குறிக்கோளை தீர்மானித்து அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தடைகள் ஆயிரம் வரும் அதை தகர்த்தெறிந்து முன்னேறுபவன் தான் வெற்றியாளனாக மாறுகிறான். எதிர்காலத்தை நோக்கி இன்றில் இருந்து நாம் சிந்தித்து அதற்கான முயற்சியை துவங்கினால் நாளைய எதிர்காலம் நம் கையில்.
