பொங்கி வந்த மகிழ்ச்சி எல்லாம்வாங்கி வந்த உடுப்பு போல கசங்கி போகதங்கி இருந்த உறவு எல்லாம்கொளுத்திய கம்பி மத்தாப்பு போல தெறித்துப் போகஎதிர்பார்த்த இன்பங்கள் ஆடி களைத்துப் போகஎதிர்பாராத துன்பங்கள் ஓடி கடந்து போகஒருநாள் கொண்டாட்டத்திற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்என திண்டாட்டம் போட்ட என்னிடம்கடைசியில் மிஞ்சியதுவெறுமையும் சில வெடிகளும்
