சுறா திமிங்கிலம் சுத்தும் கடல் அதுஅயிற மீனே உனக்கு ஆசை எதுக்கு?வயல் ஆறு குளம் எல்லாம் அளந்துட்டேஇப்ப கடல்கூட கலக்கப் போறேன்!புயல நீ பாத்திருக்க?ஆழிப்பேரலைய கேட்டுருக்க?சேத்துல நான் பொழச்சிருக்கேன்ஆத்துலையும் செத்திருக்கேன்அதுக்காகமண்ண நம்பியே நான் இருக்க மாட்டேன்என்ன நம்பித் தான் இங்கிருந்து போறேன்ஆனா தவலையே நீ எப்ப வளய விட்டு வரப்போற.!கதைஆத்துலையும் சேத்துலையும் வாழ்ந்து வந்த அயிற மீன் ஒண்ணு கடலுக்கு போகும் போது , தவள ஒண்ணு தடங்கல் பண்ணுச்சாம்.உனக்கு ஏன் இந்த வேல கடல்ல சுறா திமிங்கிலம்லாம் இருக்கும்ன்னு முதல் தடைய போட்டுச்சாம். அதுக்கு இந்த அயிற நான் வயலு, ஆறு, குளம் எல்லாம் பாத்துட்டேன் நீ சொன்ன சுறா திமிங்கிலம்லாம் இதப்(இந்த மூன்றையும்) பாத்திருக்காதுன்னு தவள புத்திக்கு உரைக்கும் படி நாசுக்காக சொல்லுச்சாம்.விடுமா தவள ?! திரும்ப அயிற கிட்ட சூறாவளி, சுனாமியெல்லாம் கடல்ல வருமே உன்னால தாங்க முடியுமான்னு கேட்டு முடிக்க. அயிற சொல்லுச்சாம் , ‘ என்ன ஆத்துல கூட பரி போட்டு புடிச்சிருக்காய்ங்க சேத்துக்குள்ள என்ன புடிக்கமுடியாம போயிம் இருக்காய்ங்க. உடனே சேறுதான் என் வீடுன்னு இங்கேயே இருக்க முடில; எனக்கு கடல கூட கடக்கணும் இல்ல கடல் கூடவே கலக்கணும். நீயும் இப்படி வெட்டியா பேசி அடுத்தவன் வேலய கெடுக்காமா. உன் வளய(இருப்பிடம்) விட்டு வெளிய வா , சாகுறதுக்குள்ள இந்த பரந்த உலகத்த முடிஞ்ச அளவு அளந்துட்டு போ அப்படின்னு நறுக்குன்னு சொல்லுச்சாம். அவ்வளவு தான் கத.காரணம்உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யும் போது பத்து பேர் தடை சொல்லுவார்கள், நூறு பேர் குறை சொல்லுவார்கள். எல்லாத்தையும் காதில் போட்டு கொள்ளாதீர்கள்.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்