பின்னும் ஒரு நாள் பிறை நிலா வெளிச்சத்தில் சில நினைவுகள் தேடி அலையும் வேளையில் – நான் கண்டெடுக்ககூடும் ஒரு துரோகத்தின் மிச்ச வேர்களை …… *** சில ரொட்டித்துண்டுகளுக்காய் நட்பினை சாட்சியாய் வைத்து என் நம்பிக்கை சிதைத்துப் போன உங்கள் உறவுகள் குறித்து – அப்போது நான் பேசக்கூடும்….. எதிர்கொள்ளும் தைரியம் உண்டென்றால் – எனைத் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களல்லாத நண்பர்களே….!
