காதலர் தினம்

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்

Found 226 Results
Page 1 of 8

அன்புக்கு ஆயுள் அதிகம்


உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம்.

ulathil irunthu - kadhal kavithai image in tamil

September 26, 2021


அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும்


அன்பு காட்டி சிலரும், காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் இரு வித மனிதர்களையுமே மறக்கவே முடிவதில்லை ..!

anbu kayam - sirantha feeling kavihai image in tamil


கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து


உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து நிற்கின்றேன் நான்!

yasithu nirkindren - kadhal kavithai


மன்னித்து விடு என்பது அன்பு


மன்னித்து விடு’ என்பது அன்பு. ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்பது பேரன்பு.

peranbu - best love forever quotes


புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல்


எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை; புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழி விரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை!

kulanthai pola - life quotes

September 23, 2021


உன் அழகில் ஆண்மனம் நடுங்குறுதே


யௌவனம் என்னும் வாரனம் கொண்டலையும் காதல் வன தேவதைப் பெண் அணங்கே.. உன் அழகில் ஆண்மனம் நடுங்குறுதே!

kadhal - love whatsapp kavithai


மதிக்கின்ற ஒரு உறவு


உன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்இருப்பதை விட உன்னையும் உன்உணர்வுகளையும் மதிக்கின்ற ஒருஉறவு இருந்தாலே போதும்.வாழ்க்கை இனிக்கும்!

inimaiyana uravu - valgai kavithai image


அன்பு செய்யுங்கள் சக மனிதர்களிடம்


மற்ற எல்லாகுணங்களையும்மறக்கச் செய்யுமளவுஅன்பு செய்யுங்கள்சக மனிதர்களிடம்!

anbanavargal - best kadhal kavithai


மனம் நிறைந்த அன்புடன்


மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை கொண்டு வந்தே தீரும்.

manam niraintha anbudan - best kadhal kavithai image in tamil

September 22, 2021


பேரியாழ் மீட்டி வருகிறாள்


பட்டிழை தரித்த புடவை மடிப்புகளில் நரம்புகள் இறுக்கி காற்றும் மயங்க பேரியாழ் மீட்டி வருகிறாள் அவள் நடையிடும் ஜதியில்!

peralagiyai - best love image in tamil

September 21, 2021


எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்


பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின் சுவடுகள் எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்; படிகளின் உயரம் குறையாது என்றுமே பயணிக்காதிருப்பின் பக்கமும் தூரமே; எடுத்து நீ வைத்திடு ஓரடி உன் எதிரியும் அஞ்சுவான் ஒரு நொடி!

pathangal manil - muyarchi kavithai in tamil


வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை


வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை ஜன்னல் புத்தகத்தில் தினம் தினம் படிக்கிறேன்!

venila - best love feel image in tamil


கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்


உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்!

unai pol - best love image in tamil

September 20, 2021


இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி


ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு… பற்றி அணைத்து மென் காற்று முத்தமிட எத்தனிக்க.. வெட்கித் தலை கவிழ்ந்து புகைச் சேலை முந்தி எடுத்து.. தனை மறைத்து மருள் சூழ இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி!

otrau ithal - best kadhal kavithai image


நினைவுகள் போதும் எனக்கு


எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற நினைவுகள் போதும் எனக்கு.. இன்றும் இனியும் என்றும் நான் காதலித்துக்கொண்டிருக்க!

en ninaivugal - best kadhal kavithai image in tamil


இன்பத்தையும் அன்பையும் கூட்டும்


வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும், மனக் கசப்பையும் கூட்டும்!

valgai thathuva image with real life quotes

September 19, 2021


ஒரு இதயம் நமக்காக இருந்தாலே


நம் முகம் கொஞ்சம் சோகத்தில் வாடினாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோஷப்படுத்த ஒரு இதயம் நமக்காக இருந்தாலே போதும்.. வாழும் வாழ்க்கை சொர்கமே!

un varthai - best love quotes


பரிசு தான் உங்கள் இதயம்


கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் உங்கள் இதயம். அதில் எத்தனை இன்பம் துன்பங்களை தாங்கவோ சேமிக்கவோ எதுவென்றாலும் பயன்படுத்த முடியும். ‘ ஆனால் நாம் அதை சரியாக பயன்படுத்தவதில் தான் உள்ளது.

valgai - sirantha valgai thathuva image in tamil


நேசிப்பவரை உண்மையா நேசி


வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!!

unmaiyaga nesi - best valgai thathuva image in tamil


உயிர்த்துக் கிடக்கட்டும் இவன் சுவாசக் காதல்


விலகாதிரு நீஅணுகாதிருக்கிறேன் நான்மனம் எட்டும்தூரத்தில்உயிர்த்துக் கிடக்கட்டும்இவன் சுவாசக் காதல்!

suvasa katru - best love forever image in tamil


நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்


நினைவுகள் மட்டும் தான்நிரந்தரம்.நிஜங்கள் எல்லாம் வெறும்நிழல்களே.இன்று உள்ளவை நாளைஇல்லாதவைகளே…

ninaivugal mattuum - best valgai thathuva image in tamil


கோடை காலத்தில் ஒரு குளிர்மழை


கோடைகாலத்தில் ஒருகுளிர்மழை நாளெனயௌவனம் தழையவந்து நிற்கிறாய்;நனைய மறுத்தால்பாதகன் நானடிநனைந்துகளிக்கின்றேன்காய்ச்சலில் நடுக்கமுற!

malaiyil nanainthu - sirantha kadhal kavithai image in tamil

September 18, 2021


நிலவின் பெருங்கருணை!


இந்தஇரவின்ஒளி எல்லாம்நிலவின்பெருங்கருணை!

intha iravin oli - best love image in tamil


உண்மையான அன்பு


உறவென்றுஆயிரம் பேர்இருந்தாலும்…ஒருவருக்காக மட்டும்மனது ஏங்குவதுதான் உண்மையானஅன்பு!!

airam uravu - kadhal kavithai image in tamil


உண்மையான அன்பின் மதிப்பு


இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு..!

unmaiyana anbu - sirantha love kavithai image

September 17, 2021


நினைத்து கொண்டு இருப்பவர்களே


நினைத்த போது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாத போதும் உன்னை ‘ நினைத்து கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்..!

unmaiyana anbu - best love image in tamil


சிறு எண்ணம் இருந்தாலே போதும்


உனக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற சிறு எண்ணம் இருந்தாலே போதும்.. துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது!

thoragam - best valgai thathuva image


அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்


நாம் தேடிசெல்வோரைவிடநம்மை தேடிவருவோர் மீதுஅதிகம்அன்பையும்அக்கறையும்செலுத்துங்கள்..வாழ்க்கைஇனிக்கும்!

nammai thedi varupavargal - best love forever image in tamil


அருகில் இருக்க பழகிக் கொள்


நீ இருப்பதால்,யார் அதிகமாகமகிழ்ச்சிஅடைகிறாரோ,அவர் அருகில்இருக்கபழகிக் கொள்!

magilchi - best love image


அன்பும் அரவணைப்பும் புரிவதுமில்லை


நம் மனதிற்கு எந்த காரணமும்தேவையும் இன்றி ஒரு சிலரைஅதிகமாக பிடித்து விடுகிறது.ஆனால் அந்த உறவுகளுக்கு நாம்எவ்வளவு தான் காத்திருந்தாலும்அவர்களுக்கு நம் அன்பும்அரவணைப்பும் புரிவதுமில்லைநம்மை பிடிப்பதுமில்லை.

athikamaga- best love forever image in tamil


Page 1 of 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்