avinayam

அவிநயம்

அவிநயம் என்பது கிபி 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும். இதனைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு நூல் எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த நூல் அவிநாயனார் என்று அறியப்படும் புலவரால் எழுதப்பட்டது. இந்தப் புலவரின் பெயர் அவிநயம் என்னும் நூல் எழுதியதால் உருவாக்கப்பட்டதாக எண்ண இடம் தருகிறது.

தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் என்னும் நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநூல் மேற்கோள்களிலிருந்து திரட்டப்பட்டவை. இதனை முதன்முதலில் திரட்டியவர் மயிலை சீனி வேங்கடசாமி.

இந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார்.

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுத்த்திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர்.

அடிக்குறிப்பு
  • சுப்பிரமணியன், முனைவர் ச. வே., தமிழ் இலக்கண நூல்கள், மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், மெய்யப்பன் பதிப்பகம், 2007, பக்கம் 10 மற்றும் 95
  • க. ப. அறவாணன் பதிப்பு
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்