அறிவியல் வளர்ச்சி

ஆதிகாலம் முதல் இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது, பூமியில் இருப்பவை அனைத்தும் இறைவனின் செயல் என்ற மனித மூடநம்பிக்கையை நிராகரித்து இயற்கை அறிவியலையும் மற்றவற்றையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் அறிவியலாளர்களே. கடந்த சில ஆண்டுகளில், நாடு வேகமாக வளர்ந்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. நமது அன்றாட வாழ்வில் அறிவியலைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. மனிதனின் வளர்ச்சி அறிவியல் வளர்ச்சியுடன் கைகோர்த்து பயணிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் நாம் அறிந்தோ அறியாமலோ அறிவியலால் உருவாக்கப்பட்ட பல சாதனங்களை பயன்படுத்தி வருகின்றோம். அவை நமது செயற்பாடுகளை இலகுபடுத்துவதோடு, நேரத்தையும் மிச்சப் படுத்துகின்றன.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் கைகளில் போன் இல்லாமல் காணமுடிவதில்லை. கையில் ஒரு சிறிய ஃபோன் மற்றும் கணினியுடன், அவர்கள் உலகத்தை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அதாவது, இதன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதுடன், பணப் பரிமாற்றம், இணையதளக் கல்வி, மற்றும் உணவைக் கூட கட்டளை அனுப்புவதன் மூலம் வீட்டிற்கே வரவழைத்துக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது அறிவியல் தான். இவ்வுலகில் அறிவியல் இல்லை என்றால் மனித வாழ்வு இல்லை என்ற அளவுக்கு அறிவியல் மனித வாழ்வோடு இணைந்துவிட்டது. மருத்துவம், போக்குவரத்து, வானிலை, வேளாண்மை என அறிவியல் ஊருடுவாத துறைகளே இல்லை எனலாம். இக்கட்டுரையில் அறிவியல் வளர்ச்சி பற்றி காணலாம்.

அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத் தொட்டு விட்டது எனலாம். நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அறிவியல் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறது. அறிவியலின் வளர்ச்சியாலும், மனிதனின் விஞ்ஞானத் திறனாலும் இன்று சாத்தியமில்லாத விஷயங்களைக் கூட எளிதாகச் செய்து முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.

எல்லையற்றது என்று சொல்லப்படும் பரந்து விரிந்த அண்டவெளியை மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டான்.

அணுவைப் பிளந்து, அதில் மகத்தான சக்தியை உருவாக்கி, அதை நல்ல வாழ்க்கைக்கு பயன்படுத்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர ஆராய்ச்சிகளும் சட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்போதுதான் அறிவியலின் பலன்களை அன்றாட வாழ்வில் அனுபவிக்க முடியும்.

குணப்படுத்த முடியாத அனைத்து நோய்களுக்கும் நவீன சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிர்கள் காக்கப்படுகின்றன.

மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்து பார்க்க முடியாது. அந்த மின்சாரத்தை இந்த உலகிற்கு அளித்தது அறிவியலே. மின் விளக்குகள், வானொலி மற்றும் ஏனைய பொழுதுபோக்கு சாதனங்கள், குளிர்சாதனப்பெட்டி உட்பட அனைத்து சமையல் உபகரணங்கள் என அனைத்துமே அறிவியல் கலந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் ஒவ்வொருவரினதும் அத்தியாவசிய தேவையாக விளங்கும் கணிப்பொறி, போக்குவரத்து சாதனங்களான பேருந்து, மிதிவண்டி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் விமானம் போன்றன அறிவியலின் தோன்றல்களே.

உலகம் நம் உள்ளங்கையில் உள்ளது என்பதை அறிவியல் உண்மையாக்கியுள்ளது. அறிவியல் வளர்ச்சி மனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளது. ஆனால் நவீன அறிவியல் நன்மைகளை மட்டுமல்ல, தீமைகளையும் உருவாக்குகின்றது.

உலகை பாதிக்கும் அணு ஆயுதங்களை உருவாக்குதல், சுற்றுச்சூழலை பாதிக்கும் இயந்திரங்கள் போன்றனவற்றை உதாரணமாகக் கூறலாம். மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த அறிவியலை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி சிறப்பாக வாழ்வோம். அறிவியலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி அதன் நன்மைகளை அடைந்து சிறப்புப் பெறுவோம்.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்