கறிவேப்பிலை சாகுபடி முறைகள்

கை நிறைய லாபம் தரும் கறிவேப்பிலை சாகுபடி முறைகள்நமது உணவில் கையால் தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைதான் இன்று பல விவசாயிகளுக்கு கை நிறைய இலாபத்தை ஈட்டி தரும் முக்கிய பயிராக உள்ளது.தென் இந்திய உணவுகளில் மணமூட்ட பயன்படுத்தப்படும் முக்கியமான வாசனைப் பயிர் கறிவேப்பிலையாகும். இதில் அதிகளவில் மருத்துவக் குணமும் இரும்பு சத்தும் உள்ளது. அன்றாட உணவில் நச்சுப்பொருட்களை நீக்குவதற்கும் கறிவேப்பிலை பெரிதும் பயன்படுகிறது. நமது வீட்டு காய்கறித் தோட்ட சாகுபடியில் மிகவும் அதிகமாக விரும்பி பயிரிடப்படும் வாசனைப்பயிர்களில் கருவேப்பிலை முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சேலம், திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு கறிவேப்பிலை காசு கொட்டும் பணப்பயிராக உள்ளது. மேலும் கறிவேப்பிலை வருடத்திற்கு மூன்று முதல் ஐந்து அறுவடை வரை செய்து இலாபம் பெறலாம் .இப்பயிர் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடவு செய்ய சிறந்த பருவமாகும். மேலும் தண்ணீர் செழிப்பாக உள்ள பகுதிகளில் வருடம் முழுவதும் நடவு செய்யலாம்.கறிவேப்பிலை பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மையுடையது. எனினும் செம்மண் பயிர் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. அதிகளவில் நீர் தேங்காத மண் வகையாக இருந்தால் நன்றாக வளரும் தன்மையுடையவை. கறிவேப்பிலையில் செங்காம்பு என்ற ரகமானது சாகுபடிக்கு ஏற்றது.பயிர் சாகுபடிக்கு முன்னர் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை சட்டிக் கலப்பையால் உழவு செய்ய வேண்டும். அதன் பின்பு டில்லர் கலப்பையால் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். இதில் கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு ஐந்து முதல் எட்டு டன் வரை மக்கிய தொழு உரத்தை சீராக இட்டு நன்றாக உழவு செய்ய வேண்டும். உழவு செய்த பின்பு தேவைக்கு ஏற்ப நிலத்தின் தன்மையை பொறுத்து பாத்திகள் அமைத்து கொள்ளலாம். இந்த பாத்தியில் கறிவேப்பிலை கன்றுகளை வரிசைக்கு வரிசை மூன்று அடியும் செடிக்கு செடி இரண்டு அடியும் இடைவெளி விட்டால் போதுமானதாக இருக்கும்.கன்றுகளை பத்து செ.மீ சுற்றளவில் குழி எடுத்து குழியின் நடுவில் கறிவேப்பிலை கன்றை வைத்து சுற்றிலும் குறு மணலை போட வேண்டும். குழியை சுற்றிலும் குறு மணல் போடுவதால் விரைவில் வேர் பிடித்து செடி நன்றாக வளரும்.நடுவு செய்த 1 மாதம் வரை நீர் தேங்காமல் வடிகால் வசதி செய்ய வேண்டும்.நடவு செய்த எட்டு அல்லது பத்து மாதங்களுக்கு பின்னர் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் வெட்டி விட வேண்டும். இவ்வாறு வெட்டி விட்ட பின்னர் பக்க தளிர்கள் வளர ஆரம்பிக்கும். பக்க தளிர்கள் வளர்ந்த பின்பு அதில் இருந்து வரும் இலைகளை அறுவடை செய்யலாம் என அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய இளநிலை ஆராய்ச்சியாளர் சேர்மராஜா தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டுத் தோட்டங்களில் கறிவேப்பிலை சாகுபடி தொடர்பான தகவல்களுக்கு 9344532096 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு பயன் பெறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்