பாணம் தொடுப்பானோ

கவி காளமேகம் பாடிய வகையினைக் கேட்டனள் கலைச்சியின் தாயார். அவள் அதனால் வருத்தமும் அடைந்தாள். தன் மகளைக் கடிந்ததுடன், அவளை மன்னித்தருளவும் கவிஞரை வேண்டிக் கொண்டாள். கவிஞரும் அப்போது கலைச்சியின் சிறப்பை வியந்து இப்படிப் பாடுகிறார். 

நேரிசை வெண்பா 

நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன் 
இஞ்சிகுடி தன்னிலும்வந் தெய்வானோ – விஞ்சு 
முலைச்சிகரத் தாலழுத்தி முத்தமிட்டுச் சற்றே 
கலைச்சிகரத் தாலணைந்தக் கால். 184 

– கவி காளமேகம் 

பொருளுரை: 

பருத்துப் புடைத்த தன் தனக்காம்புகளினாலே அழுத்தி முத்தமிட்டு கலைச்சி என்பவள் தன் கரங்களாலே சற்று நேரம் அணைத்த விடத்து, மன்மதனானவன், நஞ்சினை நிலையாகக் கொண்டிருக்கும் மலரம்புகள் நான்கினையும் ஆராய்ந்தெடுத்து இஞ்சிகுடி என்கின்ற இவ்வூரிலும் வந்து என்மீது எய்வானோ? 

அங்ஙனம் எய்ய வேண்டிய வேலை அவனுக்கு இல்லை என்பது கருத்து. 

தாமரை முல்லை மா அசோகம் நீலம் என்னும் ஐந்து மலர்க் கணைகளுள், 

நெஞ்சில் அரவிந்தமும், நீள்குதம் கொங்கையினும், துஞ்சும் விழியில் அசோகமும், சென்னியில் முல்லையும், அல்குலில் நீலமுமாக எய்வது மாரனின் மரபு. 

‘நாலும்’ என்றதனால், ஐந்தாவதான நீலத்தை எய்தலை நாடி, அவளைக் கூடுதலையும் விரும்பினார் கவிஞர் என்க.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்