யோகா கட்டுரை

யோகா இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த ஒரு அரிய கொடை. யோகா என்ற சொல்லிற்குப் பல பொருள்கள் வழங்கப்பட்டாலும், மேம்படுத்துதல் என்ற பொருள் சற்றே பொருத்தமாக அமையும். யோகா என்பது உடற் பயிற்சி மட்டும் அல்ல. இது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. யோகா வாழ்க்கை முறை நமது உடல், மனம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்கிறது.

யோகா பண்டைய இந்தியாவின் ஆறு தத்துவ சித்தாந்தங்களில் ஒன்றாகும். பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார். யோகா வாழ்க்கை முறையில் பதஞ்சலி முனிவர் படிப்படியாக எட்டு நிலைகளை பற்றிக் கூறுகிறார். இவை யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி ஆகியன. ஒவ்வொரு சாதகரும் யோகா வாழ்க்கை முறையில் இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாகக் கடந்து சமாதி என்ற உயரிய நிலையை அடைய வேண்டும்.

யோகாசனம் என்பது யோகா வாழ்க்கை முறையில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு உடல் தோரணைகளைக் குறிக்கும். நோயற்ற வாழ்விற்கும், உடல் பலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் யோகாசனங்கள் வழிவகை செய்கின்றன.

யோகா நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பயிற்சியாகும். ஒரு சில யோகாசனங்களையாவது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு நமது அன்றாட வாழ்வின் பயிற்சியாக அவற்றை செய்வது நமக்கு நீடித்த நலம் பயக்கும்.

சமீப காலமாக யோகாவின் முக்கியத்துவத்தை பல நாடுகளும் புரிந்து கொண்டு இந்த வாழ்க்கை முறையினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்தியாவின் உதவியை நாடுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் நாளை அகில உலக யோகா தினமாக நாம் கொண்டாடுகிறோம். அன்றைய தினத்தில் பல்வேறு நாடுகளிலும் யோகா சம்மந்தமான பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் பெறுகின்றன. யோகாவினை நாம் தினசரி வாழ்வில் பயிற்சி செய்து நலமும் உயர்வும் பெறுவோமாக.

Download யோகா – PDF 1
Download யோகா – PDF 2
Download யோகா – PDF 3
Download யோகா – PDF 4
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்