ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிக்குப் பயன்படும் முருங்கை மரம் கண்டிப்பாக இருக்கும் .
இதில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் தண்டுப் பகுதியில் இருக்கும் சொனைப் புழு அல்லது கம்பளிப் புழுக்கள்தான். முருங்கை, புங்கம் மற்றும் பூவரசம் மரம் ஆகியவற்றின் இலைகளை தின்றுவிடுவதால் மரத்தின் இலைகள் இல்லாமல் இருக்கும். மேலும் புழுக்கள் தண்டு பகுதியில் குடியிருக்கும். இதன் உடலில் கம்பளி புழுவின் உடலில் உள்ளது போன்று கூரிய முடிகள் நிறைந்திருக்கும். இவை நம் உடலில் பட்டால் அரிப்போ அல்லது தடிப்புகளோ ஏற்படும். இந்த புழுக்களை அழிக்க பெரும்பாலும் தீயிட்டு அழிப்பார்கள்.
அதனால் மரத்தின் பட்டை தீயால் கருகி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் எரிக்கும் போது பறக்கும் முடிகள் நம்மீது பட்டால் உடலில் அரிப்பு ஏற்பட்டு தடிப்புகள் உண்டாகும்.இந்த புழுக்கள் இருக்கும் மரத்தை தீ வைத்து அழிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக நாம் வீடுகளில் சலவைக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது சலவைத் தூளை தண்ணீரில் கரைத்து புழுக்கள் மேல் ஊற்றினாலே புழுக்கள் மடிந்து விடும். எனவே சோப்பு நீர்க் கரைசலை கொண்டே முருங்கை மரத்திலுள்ள கம்பளிப் புழுக்களை எளிதாக கட்டுப்படுத்தி விடலாம்.
*தகவல்*
மா.சேர்மராஜா
இளநிலை ஆராய்ச்சியாளர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
அருப்புக்கோட்டை
9344532096