உத்வேகம் சிறுகதை


தவளைகளின் தன்னம்பிக்கை || Inspiration Short Story

ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் ப ோது மழை வந்தது. அப்ப ோது பெரிய தவளை , “நண்பா மிகவும் மழை பெ ய்கிறது எனவே எங்கே யாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்” என்றது. அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழை யில் இருந்து ஒதுங்க அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின் சமயல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன. திடீரென்று நிலை தடுமாறி நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன. எவ்வளவவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை . முயற்சியிலிருந்து த ோல்வியடை ந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது. இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது. மற்ற தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு இருந்ததால் கடைந்த மோரில் வருவது போல பாலில் இருந்து மேலே வெண்ணெய் வந்தது.அதிசயப்பட்ட தவளை மீண்டும் முயற்சியை த ொடர்ந்தது.அதனால் கடினமான வெண்ணை மேலே
வந்தது. தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து பாதுகாப்பான இடம் தேடியது.

கண்ணோட்டம் : முயற்சி திருவினையாக்கும்.

உத்வேகம் சிறுகதை
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்