ஒரு பறவை

ஒரு அழகான சின்னக் கதை…

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்தப் பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது.

கோடைக் காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

அந்தப் பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது

அந்தப் பறவைக்கு மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்றுத் தெரியவில்லை.

பறவைகள் அழியத் தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழியக் கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழியக் காரணமானது.

அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து நாம் அழகுப் பார்க்கிறோம். அவர்களுடைய அழிவுக்கும் நாமே உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாடத் தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை நிச்சயமாகத் தாங்க முடியாது.

உங்கள் பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.

நல்லது கெட்டதை தானாக கற்றுக் கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்கிற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்றுக் கொடுக்க மறந்தப் பாடத்தை, இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும். எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்ததோ அதே போல.

இதைத் தான் ஆங்கிலத்தில்
Survival Of Fittest என்று நாம் சொல்லுகிறோம்.

அதை நோக்கித் தான் எல்லா மானிடப் பிறவிகளும் ஓடிக் கொண்டு இருக்கின்றன

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்