தமிழ் கதைகள் – தற்பெருமை

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்றார். வழியில் ஒரு கல் தடுக்கி குளத்தில் விழுவதற்குள் அவருக்கு பின்னால் வந்த மனிதர் பாய்ந்து வந்து முல்லாவை குளத்தில் விழாமல் காப்பாற்றினார். முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ, முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

முல்லா, அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். முல்லா, ஒரு நாள் அந்த குளக்கரைப் பக்கம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பொழுது, அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார். திடீரென முல்லா குளத்தினுள் குதித்து விட்டதைப் பார்த்த மக்கள் கூக்குரல் எழுப்பினர். முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் குதித்தார்.

முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்பது அவருக்கு தெரியாது. எனவே முல்லாவை காப்பாற்ற குளத்தில் குதித்தார். முல்லா குளத்தில் நன்றாக நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார். முல்லா, தற்பெருமை பேசிய அவரை மக்கள் முன் அறிமுகப்படுத்தி, நீந்த தெரிந்த என்னை இவர்தான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.

3

1 thought on “தமிழ் கதைகள் – தற்பெருமை”

  1. முல்லாக்கதை அருமை தற்பெருமை பேசுபவர்களுக்கு இந்த கதை நல்ல பாடமாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்