பஞ்சதந்திர கதைகள் – அன்பின் மதிப்பு

அக்பர் என்ற அரசன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்து செல்வது வழக்கம். அப்போது ஒரு விவசாயி, அக்பரை பார்ப்பதற்கு வந்தார், அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்களைப் புறக்கணித்து, அரசனின் படுக்கைக்குச் சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்தான்.

அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் அம்மனுக்கு பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பிரசாதத்துக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்ற கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது.

பஞ்சதந்திர கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் நீதி: வேஷம் இல்லாத உண்மையான அன்பு தான், இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து. நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்