pathinen pronanangal

பதினெண் புராணங்கள்

மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுக்கப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.

வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.

18 மகா புராணங்கள்
  • பிரம்ம புராணம்
  • பத்ம புராணம்
  • விட்ணு புராணம்
  • சிவ புராணம்
  • லிங்க புராணம்
  • கருட புராணம்
  • நாரத புராணம்
  • பாகவத புராணம்
  • அக்னி புராணம்
  • கந்த புராணம்
  • பவிசிய புராணம்
  • பிரம்ம வைவர்த்த புராணம்
  • மார்க்கண்டேய புராணம்
  • வாமன புராணம்
  • வராக புராணம்
  • மச்ச புராணம்
  • கூர்ம புராணம்
  • பிரம்மாண்ட புராணம்
மகாபுராணங்கள்

பழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் குறிப்பிடப் ​பெற்றுள்ளது. “அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டம், 4) இலிங்கம், 5)காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) விஷ்ணு, 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்னேயம், 18)பிரமகைவர்த்தம் என்பன”.

இவற்றை முறையே, “மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்” எனத் திவாகரச் சூத்திரம் கூறுகிறது.

இப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.

“சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம் வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம் பொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோ டெய்திய பிரமம் பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்”

“காதல்கூர் நாரதீயங் கருடம் வயிணவஞ்சூழ் மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம

மேலும் “பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற் றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி னருமை யிங்கெழுபஃதந்த நாலதிற் கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்” என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் “மகாபுராணங்கள்” என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்