திருமண நாள் வாழ்த்துகள் கவிதைகள்
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்! திருமண நாள் வாழ்த்துகள்!
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பிர்! உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற உறவும் போற்ற இணைபிரியாத வாழ்வினிலே, நூறாண்டு காலம் வாழ்ந்திடவே உளம் கனிந்த நல்வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
திருமண நாள் நல்வாழ்த்துகள்! செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்
ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும் விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும்போது திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்!